அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். வலைகளின் எண்ணிக்கை கூடினாலும் மீன்களின் எண்ணிக்கை குறைவதில்லை என்பதுபோல எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் தினமும் புதிதாய் எழுதத் தொடங்குபவர்களின் எண்ணிக்கை தினமும்அதிகரிக்கத் தொடங்கிவிட்டது என்பதை நன்றாக அறிய முடிகிறது. எத்தனை எத்தனை புதியப் பதிவுகள் எத்தனை எத்தனைபுதியப் பதிவர்கள் அனைவரின் பதிவுகளின் தலைப்புகளை அறிந்துகொள்வதிலே பாதி நாட்கள் கழிந்து போகிறது. இதில்மற்றொருக் கூட்டம் பதிவின் தலைப்புகளை தாறுமாறாக வைத்து வாசிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்கவும்செய்துவிடுகிறார்கள்.
எது எப்படியோ கடந்து ஒரு வாரத்தில் நான் உணர்ந்த சில நிகழ்வுகள் இவைதான். சரி..! இனி நாம் இன்றையத் தகவலுக்கு வருவோம். நான்கு பேர் ஒன்றாய் சேர்ந்தாலே நாட்டு நடப்பு என்கிற பெயரில் பக்கத்து தெருவில்தும்மியவன் முதல் எதிர் தெருவில் தடுக்கி விழுந்தவன் வரை ஏதாவது
ஒன்றை பேசி அப்பொழுதே அதை மறக்கவும் செய்துவிடுகிறோம் என்பது போலவே கடந்த
சில வாரங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது அன்னா
ஹசாரே-வின் உண்ணாவிரதமும். இது வரவேற்கத் தகுந்தது என்ற போதிலும் இறுதியில்
இதுதாண்டா போலீஸ் என்பது போல இதுதாண்டா அரசியல் என்று சொல்லி விடுவார்கள்
என்பது மட்டும் அரசியல் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். சரி
இனி நமக்கு ஏதாவது ஒன்றை பற்றி இன்று புதிதாய் அறிந்துகொள்வதை
விட்டுவிட்டு எதற்கு இந்த தேவை இல்லாத புளிக்கும் விசங்கள் என்று சலித்துக்
கொள்ளவேண்டாம். தகவலுக்கு போகலாம்.
ஒரு
காலத்தில் அஞ்சல்காரர்களும் அஞ்சல் அலுவலகங்களும்தான் பலருக்கு
தெய்வங்களாக தெரிந்தது அந்த அளவிற்கு தொலை தூரத்தில் இருக்கும், மகனோ
அல்லது கணவனோ அப்பாவோ, அம்மாவோ என்று உறவுகளின் உணர்வுகளை சுமந்துவரும்
கடிதங்கள் ஒவ்வொருவரின் கண்களுக்கும் காட்சி தர உதவிய துறைகளில் இதுதான்
என்று அனைவரும் அறிந்ததே. இன்றும் கடிதங்களின் வரவுகள் குறைந்துபோனாலும்
அந்தக் கடிதங்களுக்கு இருக்கும் ஒரு குறைந்து போகாத சுவராஸ்யம் எந்த இணைய
வளர்ச்சியிலும் இல்லை என்று சொல்லலாம். சரி இந்த கடிதங்களுக்கும் இந்த
அஞ்சல் துறைக்கும் எண்ணத் தொடர்பு இந்த தகவலுடன்..!? இந்த தகவல் கடிதங்கள்
பற்றியது இல்லை கடிதத்தின் மேல் ஒட்டப்படும் தபால் ஸ்டாம்புகள்
பற்றியதுதான் .
ஒரு
நாட்டின் , மாநிலத்தின் கலாசாரத்தை , வரலாற்றை , மக்களின் பழக்கவழக்கங்களை
எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் சரித்திர ஆதாரங்களாக தபால்
தலைகள் (POST STAMPS) திகழ்கின்றன
. அரசியல் தலைவர்கள் , நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள்
உருவம் பொறித்த தபால் தலைகள் உட்பட அனைத்து நாடுகளின் தபால் தலைகளும்
ஒவ்வொரு வரலாற்றை சொல்கிறது , நினைவுபடுத்துகிறது
உலகத்தில்
தோன்றிய மற்ற கண்டுபிடுப்புகளை விட இந்த தபால் தலை அறிமுகம் பல
விவாதங்களுக்குப் பின்பே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்றால்
நம்புவீர்களா !? ஆம் முதன் முதலில் 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' (James Chalmers}
என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட்
ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, தபால் துறைச் சீரமைப்பு: இதன்
முக்கியத்துவமும், செயற்படுதன்மையும் என்னும் அறிக்கையில் வெளியிட்டார் .
சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின்
முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் முதபால் அலுவலகம், முதன் முதலில் 1840ல்
பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும்
பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உலகின் தல் உறைகளையும் வெளியிட்டது.
மூன்று
மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டபென்னி
பிளாக் (Penny Black) என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும்
வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப்
பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன்
எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப் பட வேண்டுமென்ற மிகக் கடுமையான
சட்டம் ஒன்றை உருவாக்கினார்கள் . இந்த சட்டம் பல ஆண்டுகள் வரை யாராலும்
எதிர்க்கப் படாமல் இருந்துவந்தது . அதன் பின் சீனா மற்றும் ஜப்பான் போன்ற
நாடுகளின் தலையீட்டால் இந்த சட்டம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது
என்றால் பார்த்துகொள்ளுங்கள்
இதுவரை உலகில் உருவாக்கப் பட்ட தபால் தலைகளில் மிகவும் பிரபலமான தபால் தலைகள் இவைகள் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள்
பென்னி பிளாக்
மொரீஷியஸ் நீல பென்னி
The "Treskilling" Yellow
தலைகீழ் ஜென்னி
பிரிட்டிஷ் கயானா 1 சென்ட் சாந்து
Perot provisional
Hawaii Missionaries
Basel Dove
Uganda Cowries
Vineta provisional
கருப்பு ஹொண்டூராஸ் (Black Honduras)
Scinde Dawk
சென் லூயிஸ் கரடிகள் (St. Louis Bears)
இன்று இருக்கும்.நம்மில்
பலர் தபால்களில் ஸ்டாம்புகளை (அஞ்சல் வில்லை) ஓட்டும்பொழுது நாக்கில்
வைத்து எச்சிலைத் தடவித்தான் ஒட்டி இருக்கிறோம். ஏன் நானும் எத்தனையோ முறை
இதேபோல்தான் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் இந்த தகவலை அறிந்த பொழுது
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி என்ன இந்த ஸ்டாம்பில் இருக்கிறது
என்று பலருக்கு எண்ணத் தோன்றலாம் சொல்கிறேன். சிலர் தபால் ஸ்டாம்புகளை
(POST STAMPS) நாக்கினால் நக்கி ஒட்டுகிறார்களே, இது ஆசாரக் குற்றம். பழைய
பூட்ஸ்கள், செருப்புகளையெல்லாம் நெருப்பில் போட்டு, அதிலிருந்து
தயாரிக்கப்படும் ஒருவிதப் பசையே ஸ்டாம்பின் பின்புறத்தில் தடவி
இருக்கிறார்களாம், இன்று வரை ஸ்டாம்புகளின் பின் புறத்தில் இந்த முறைதான்
கையாளப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இனி எந்தப் பொருளையும் வாங்கி நாக்கில் வைப்பதற்கு முன்பு சற்று யோசிப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
சரி
நண்பர்களே..!! இன்றையத் தகவலும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று
நம்புகிறேன். மீண்டும் ஒரு புதியத் தகவலுடன் விரைவில் சந்திக்கிறேன். பதிவு
பிடித்திருந்தால் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
நேசத்துடன்
தமிழன் யோகேஸ்வரன்
No comments:
Post a Comment