தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

விவேகானந்தர்


            ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஒரு கோவில் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் . அந்த கோவில் சுவற்றில் ஒருவர் , ' கடவுள் எங்கும் இல்லை ' என்று பொருள்படும்படி ' GOD IS NO WHERE ' என்று எழுதி இருந்தார் .

              இதைப் பார்த்த மாத்திரத்தில் சற்று சிரித்த விவேகானந்தர் , அந்த வாக்கியம் எழுதப்பட்ட கோவில் சுவற்றின் அருகே சென்றார் . அந்த ஆங்கில வாசகத்தில் இருந்த டபிள்யூவில் கொஞ்சம் திருத்தம் செய்தார் . அதாவது , ' NO ' என்பதை ' NOW ' என்று ,' WHERE ' இல் இருந்த ' W ' வை மட்டும் எடுத்து ,' NO ' க்கு பின்னால் வருமாறு மாற்றினார் .

               இப்போது அந்த வாசகத்தை படித்துப் பார்த்தார் . ' கடவுள் இப்போது இங்கே இருக்கிற்றார் ' என்று பொருள் தந்தது . அதாவது , ' GOD IS NOW HERE ' என்று அந்த ஆங்கில வாசகம் மாறி இருந்தது .விவேகானந்தருடன் வந்தவர்கள் , அவரது இந்த அறிவுக் கூர்மையை கண்டு வியந்தே போனார்கள் .

No comments:

Post a Comment