தினம் ஒரு திருக்குறள்

Tuesday, February 28, 2012

கல்வியின்றி காலம் வென்றவன் :தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)



னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் கொட்டிக் கிடக்குது குட்டித் தகவல்கள் என்றப் பகுதியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பொதுவாக நம்மில் பலருக்கு அதிகமாக கேட்பதை விட அதிகமாக பேசுவதுதான் பிடிக்கும். அதிலும் மணிக்கணக்கில் பேசினாலும் எந்த சுவராஸ்யங்களும் இல்லாமல் ஏதோ அனைவரும் வேண்டா வெறுப்பாக கேட்கும் அளவில் பேசிக்கொண்டே இருப்பவர்கள் சிலர் உண்டு. இதில் இன்னும் சிலர் முத்துக்கள் உதிர்த்தார்போல சில வார்த்தைகள்தான் பேசுவார்கள். ஆனால் அந்த சிலவார்த்தைகள் பலமணி நேரம் சிந்திக்கத் தூண்டும் வகையில் கருத்துக்கள் நிறைந்த பேச்சாக இருக்கும். ஒரு மிகப்பெரிய பூட்டை திறக்கப் பயன்படும் ஒரு சிறிய திறவுகோல் போன்ற சிறப்பு கொண்டவைதான் குட்டித் தகவல்கள் என்று கூட சொல்லலாம். காரணம் பக்கம் பக்கமாக தகவல்கள் சேகரித்து எழுதினாலும் இதுபோன்ற ஒருசில வரிகளில் வாசிக்க நேரும் குட்டித் தகவல்கள் பொதுவாக எல்லோருக்கும் ஒரு சுவராஸ்யம் நிறைந்த எதிர்பார்ப்புகளை வாசிப்பின் தொடக்கத்திலே ஏற்படுத்தி விடுகிறது என்று சொல்லலாம்.
ரி..! இனி நாம் தகவலுக்குள் செல்லலாம். கல்வி இன்றைய நிலையில் எல்லோரும் கல்வி கற்கிறார்களோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு பள்ளி தொடங்கிவிட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கல்வி ஒரு மிக சிறந்த வருமானம் ஈட்டும் தொழிலாக மாறிப்போனது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காலத்தில் இலவசமாக சில சலுகைகளைக் கொடுத்தாலாவது தங்களின் குழந்தைகளை கல்விக் கற்க அனுப்ப மாட்டார்களா என்று ஏங்கிய உயர்ந்த உள்ளங்கள் சுவாசித்த இதே தேசத்தில் இன்று பணம் இல்லாத ஏழைகள் படித்து என்ன கிழித்தார்கள் என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டார்கள் திறமை உள்ள மழலை செல்வங்கள் . இதிலும் இன்னும் சில யார் எது சொன்னாலும் நமக்கு என்ன என்று எந்தக் கவலைகளும் இன்றி காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு இப்படி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கல்வி என்பது உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது என்று சொல்லலாம் . ஆனால் இத்தனை அறிவியல் வளர்ச்சிகளை நாம் எட்டியும் இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு மாற்றத்தை  ஒரு தனி மனிதன் ஏற்படுத்தி சென்றார் என்றால் நம்புவீர்களா !??
ம் நண்பர்களே அவர்தான் இந்த உலகத்தின் மொத்த வளர்ச்சியையும் யாரும் வெல்ல இயலாத சாதனைகளின்  உச்சத்தில் இட்டு சென்ற தாமஸ் ஆல்வா எடிஸன்தான் அவர் .இப்படித்தான் ஒரு முறை எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்  ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம் .படிக்காத ஒரு மேதை.! பட்டங்கள் எதுவும் பெறாத நூறு பல்கலைக்கழகங்கள் ஒன்றாய் பிரசவித்த அதிசய மனிதன் என்று சொல்லலாம் .

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.” என்ற வார்த்தைகளை சாதனைகளின் பட்டியலில் படம் பிடித்துக் காட்டிய வினோத மனிதன் .

ம்.!! தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் பிறக்கும்பொழுதே தனது தலை பின்புறமாக சற்று நீட்டிய நிலையில் பிறந்தார். அவர் வளர்ந்தப் பிறகும் அதன் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் போனது. அவர் பள்ளிக்கு செல்லும் வயது வந்ததும் தாமஸ் ஆல்வா எடிசனை அவரது தாயார் பள்ளியில் சேர்த்தார். தான் பள்ளிக்கு சென்ற ஒரிரு நாட்களில் தாமஸ் தனது அன்னையிடம் நான் பள்ளிக்கு இனி செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தார். காரணம் கேட்ட அவர் தாய் பள்ளியில் எல்லோரும் என்னை ”கோண மண்டையா” ”கோண மண்டையா” என்று சொல்லி கேலி செய்வதாக கூறினார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி அவரது தாயார் மீண்டும் பள்ளிக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஒரு இரண்டு மாதங்கள் சரியாக பள்ளி சென்ற எடிசன் மீண்டும் ஒரு நாள் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார்.

மீண்டும் சமாதனப்படுத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்ட எடிசன் மீண்டும் ஒருமாதகாலம் மட்டுமே பள்ளிக்கு சரியாக சென்றிருப்பார். வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல மறுப்புத் தெரிவிக்கத் தொடங்கிய எடிசனின் செயல் கண்டு கோபம் கொண்ட அவரின் தாயார் உனக்கு ”கோண மண்டை” அதுதான் படிப்பும் ஏறவில்லை, சொல்வதையும் கேட்க மறுக்கிறாய் என்று அடிக்கத் தொடங்கினார். அன்றுடன் தனது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த அதே தாமஸ் ஆல்வா எடிசன்தான். பிற்காலத்தில் மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர்; அமெரிக்க அரசு அவருக்கு சுமார் 1097 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்கியிருந்தது உலகத்தில் அதிகக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதித்தவர்களின் பட்டியலில் இன்றும் முதல் இடத்தில் திகழ்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தில் இன்னும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் வியப்பானத் தகவல் என்னவென்றால்.எந்த ஒரு தனி மனிதனுக்காகவும் தங்களின் சட்டத்தை மாற்றிக் கொள்ளாத அமெரிக்க முதல் முறையாக ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார்.அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 மணிக்கு ‘வி Statue of Liberty கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் Traffic Signals விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் அனைத்துவைக்கப் பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த பின்பு அவரின் தலையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் மனிதர்களாகிய நமக்கு இருக்கும் அதே அளவுதான் மூளை இருக்கிறது. ஆனால் அவரின் பின்புறத் தலையின் நீந்தப் பகுதியில்தான் ஏதோ கண்டறிய இயலாத மிகப்பெரிய மர்மம் மறைந்திருப்பதாக அறிக்கை பிறப்பித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  .


ஒருவேளை நமக்குத் தெரிந்தே யாருக்கேனும் சராசரி மனிதனின் வளர்ச்சியில் இருந்து மாறுபட்ட நிலையில் உடல்களின் வளர்ச்சி இருந்தால் இவர்களும் நாளை வரலாறு பேசப்போகும் ஏதேனும் தனி சிறப்பு பெற்று இருப்பார்களோ என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றும் என்பது மட்டும் திண்ணம்.

ரி நண்பர்களே.! இந்த இன்று ஒரு தகவல் எந்த தொடரில் இன்று நாம் பார்த்த இந்தத் தகவலும் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment