இன்று அதிகளவானவர்கள் வீடியோ கேம்களை விரும்பி விளையாடுவார்கள். எனினும் சில பெற்றோர் அதனை தடைசெய்வது வழக்கம்.
தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாடுபவர்களுக்கு கண்பார்வை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த கனடாவின் மக்மாஸ்ரர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாப்னி மயூர் என்பவர் பார்வைக்குறைபாடு உடைய ஒரு நோயாளி நான்கு வாரங்களில் நாற்பது மணித்தியாலங்கள் வீடியோ கேம் விளையாடிய பின் அவரது பார்வையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகமுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கண்களுக்கு சுறுசுறுப்பை வழங்குவதற்கும், சில வகையான மூளைக்கோளாறுகளை தவிர்ப்பதற்கும் இந்த வீடியோ கேம்கள் உதவிபுரிகின்றன.
No comments:
Post a Comment