தினம் ஒரு திருக்குறள்

Monday, February 27, 2012

இன்று இரவு ஒரே நேரத்தில் 4 கிரகங்கள் பார்க்கலாம் : இந்திய விஞ்ஞானி தகவல் |



இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை பிரகாசமாக தெரியும்

சூரியனைச் சுற்றி வரும் 4 கோள்களை இன்றிரவு ஒரேசமயத்தில் பார்க்கலாம்
பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் அய்யம் பெருமாள் தகவல்

சூரியனைச் சுற்றி வரும் வியாழன், வெள்ளி, செவ்வாய், சனி ஆகிய 4 கோள்களையும் இன்று இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை வானத்தில் ஒரேநேரத்தில் தனித்தனியாக பார்க்கலாம்.

இதுகுறித்து சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

வானில் சூரியனை வெள்ளி கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 223 நாட்களும், செவ்வாய் கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 687 நாட்களும், வியாழன் கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11 ஆண்டுகள் 8 மாதங்களும், சனி கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 29 ஆண்டுகள் 8 மாதங்களும் ஆகின்றன. இந்த கோள்கள் வேகமாகவும், மெதுவாகவும் செல்லும். அவ்வாறு செல்லும்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒரே சமயத்தில் இந்த நான்கு கோள்களும் வானில் தனித்தனியாக புள்ளி வடிவத்தில் பிரகாசமாக தெரியும்.

இன்றிரவு வானத்தின் மேற்கு பகுதியில் வெள்ளி கோளும், வியாழன் கோளும் தெரியும். வானத்தின் கிழக்குப் பகுதியில் செவ்வாய் கோளும், சனி கோளும் தனித்தனியாக தெரியும். இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதால், இதனை வானத்தின் அதிசய நிகழ்வு என்று சொல்ல முடியாது.

1999-ம் ஆண்டு இந்த நான்கு கோள்களும் ஒரேநாளில் வானத்தின் கிழக்கு பகுதியில் தனித்தனியாக தோன்றியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment