தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

அரிய வகை இளஞ்சிவப்பு வைரம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு..!!


மிகவும் கிடைப்பதற்கு அரிய வகை இளஞ்சிவப்பு நிறத்திலான வைரம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ரியோ டியட் நிறுவனம், ஆர்க்கிள் சுரங்கத்தில் வைரங்கள் தேடும் பணியில் 26 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இதுவரை கண்டிராத வகையில் 12.76 காரட் இளஞ்சிவப்பு வைரத்தை புதனன்று கண்டுபிடித்தது.
இதுகுறித்து நிறுவனம் கூறிய விவரம்: பொதுவாக இளஞ்சிவப்பு வைரம் கிடைப்பது மிகவும் அரிது. அதனால் அதன் விலை 20 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், இதற்கு முன் கண்டிராத, இதுபோன்ற பெரிய இளஞ்சிவப்பு வைரத்தை இனியும் காண முடியுமா என்பது சந்தேகமே.
பளபளப்பாக்கி வடிவமைத்தபின் இதன் மதிப்பு சர்வதேச நிபுணர்களால் நிர்ணயிக்கப்படும். பின்னர், ஆண்டு இறுதியில் டெண்டர் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விற்கப்படும். அரிய வகை வைரமான இதன் ஒரு காரட் 4.9 கோடி வரைக்கும் அல்லது மொத்தமும் குறைந்தது 49 கோடிக்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment