அனைத்து
நண்பர்களுக்கும் வணக்கம். இன்று உலகத்தில் காற்றின் வேகத்தை விட கணினியின்
வேகம் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது. கணினி என்றதும் இணையம்தான் அதில்
தலைப்பு செய்தி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும்
பரவிக்கிடக்கிறது இந்த இணைய வளர்ச்சி.
ஒரு காலத்தில் ஆடை இல்லாமல் வெட்கம் அறியாமல் சண்டை இல்லாமல் பொறாமை இல்லாமல் கண்ணில் பட்டதை ரசித்து கைகளில் கிடைத்ததை உண்டு தினம் தினம் தனது வாழ்வை ஒரு விலங்கைப் போல கடந்தவன் செய்த புதுமைதான் இந்த கணிணிமயமான இன்றைய உலகமா !? என்று எண்ணிக்கொள்வதற்கு வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.
ஒரு காலத்தில் ஆடை இல்லாமல் வெட்கம் அறியாமல் சண்டை இல்லாமல் பொறாமை இல்லாமல் கண்ணில் பட்டதை ரசித்து கைகளில் கிடைத்ததை உண்டு தினம் தினம் தனது வாழ்வை ஒரு விலங்கைப் போல கடந்தவன் செய்த புதுமைதான் இந்த கணிணிமயமான இன்றைய உலகமா !? என்று எண்ணிக்கொள்வதற்கு வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.
எத்தனை
எத்தனை வளர்ச்சிகள் !? தரையில் நடந்தவன் நிலவில் மிதக்கிறான். ஒற்றைக்
கணினி கொண்டு இந்த உலகை ரசிக்கிறான். அந்த அளவிற்கு இந்த இன்டர்நெட் என்று
சொல்லப்படும் இந்த வார்த்தைக்குள் இத்தனை சக்தியா !? சரி இது ஒரு பக்கம்
இருக்கட்டும். இந்த பிரமிப்புடன் இந்த இணையம் பற்றி இதுவரை நீங்கள்
அறிந்திராத சில தகவல்களை நாம் அறிந்துகொள்ளலாம்.
இணையத்தில் இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் அஞ்சல்கள் (email) பற்றி
பலருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த மின் அஞ்சலை முதன் முதலில்
உருவாக்கி அனுப்பிய முதல் மனிதர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..!?
ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson)
தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு
நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய
மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.
மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
இன்று தேடுபொறி (search engine)
என்றாலே உடனே அனைவரின் எண்ணங்களிலும் பதிலாய் வருவது கூகுள்தான் என்று
சொல்லலாம் அந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது இதன் புகழ். ஆனால் நம்மில்
எத்ததனை பேருக்கு உலகத்தில் முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட
முதல் தேடுபொறி (search engine) பற்றித் தெரியும் !?
ஏப்ரல் 20, 1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.com
தான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும் (search engine). யாஹீவும்
(Yahoo), கூகுளும் (Google) இதற்கு பின்னால் வந்தவையே என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.
என்னதான்
இணையத்தை பற்றி தகவல்கள் சொன்னாலும் இந்த தகவல் போன்று நமது எண்ணங்களை
சுதந்திரமாக வெளிப்படுத்த நமக்கு ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி இருக்கிறது
இந்த வலைத் தளம். இன்று வலைத்தளம் பயன்படுத்தி தங்களின் எண்ணங்களை
பகிர்ந்து வரும் நட்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது என்பது
யாரும் மறுக்க இயலாத திண்ணம்.
சரி
இந்த வலைத் தளம் எப்பொழுது முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகத்தில் முதன்
முதலில் உருவாக்கப்பட்ட தளத்தின் பெயர் என்ன என்று ப்ளாக் எழுதும் எத்தனை
நண்பர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் அனைவரும்
தெரிந்துகொள்ளுங்கள்.
ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் முதல் வலைப் பதிவாளராக அறியப்படுகிறார். ஜனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/ தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.
என்ன
நண்பர்களே இணையம் பற்றிய சில சுவாரசியமானத் தகவல்களை
அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் பல புதியத் தகவலுடன்
உங்களை சந்திக்கிறேன்.
No comments:
Post a Comment