தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம் அறிமுகம்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவியன் முல்லர் என்ற விஞ்ஞானி சோலார் இலைகளுடன் கூடிய போன்சாய் சார்ஜர் என்ற மரம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
மரங்களை தொட்டியில் வளர்க்கும் கலைக்கு போன்சாய் என்று பெயர். இக்கலையையும், சோலார் தொழில்நுட்பத்தையும் சேர்த்து போன்சாய் சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.
இதுகுறித்து முல்லர் கூறுகையில், சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு எலக்ட்ரீ என்று பெயர் வைத்திருக்கிறேன்.
இதை உருவாக்க 3 ஆண்டுகள் ஆனது. வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளி படும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.
சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய சோலார் பேனல்கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
மேலும் இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட பேட்டரி தக்கவைத்துக் கொள்ளும். முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் எலக்ட்ரீ 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment