தினம் ஒரு திருக்குறள்

Tuesday, February 28, 2012

அறிந்துகொள் அரியத் தகவல்கள் ஆயிரம் : உலகில் அழகு உள்ளத்தில் ( சாக்ரடீஸ் )



னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் புது வருடத்தின் முதல் வாரத்தில் இன்று ஒரு தகவல் பதிவின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் அனைவரும் பார்க்க இருப்பது அழகு பற்றிய ஒரு தகவல்தான்.
ரி உலகத்தில் என்னதான் ”அழகு” என்ற வார்த்தைக்கு ஆயிரம் விளக்கங்கள் தந்து தெளிவுபடுத்தி இருந்தாலும், இன்னும் நாம் புற அழகு ஒன்றே சிறந்த அழகாக எண்ணி அந்த நிரந்தரமற்ற அழகிற்கு மேலும் அழகு சேர்க்க பல ஆராய்சிகளும், ஆபரணங்களும் தினந்தினம் ஒரு புதுமையை நம்மில் புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. அழகு என்பதே ஆபத்தான ஒன்றுதான் என்ற போதும் அதை ரசிக்க மறுக்கும் இதயம் நம்மில் யாருக்கும் இல்லை என்றே சொல்லவேண்டும் . ”அழகு” என்ற வார்த்தையை நாம் அழகாக உச்சரிப்பதே ஒரு அழகுதான். சரி. இந்த அழகிற்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்னதான் தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எழலாம் இதோ சொல்கிறேன்.
 இப்படித்தான் ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஷிடம், ஒரு பெண் சென்று ”உலகத்தில் சிறந்த அழகென்பது எது?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் கொடுத்த தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் ”ஒரு பானை நிறைய சோறு இருக்கிறது. அதை எடுத்து உண்பதற்கு நமக்கு பயன்படுவது தங்கக் கரண்டியா !? இல்லை மர கரண்டியா !?” என்றுக் கேட்டாராம். அதற்கு அந்தப் பெண் ”அதெப்படி சோற்றை எடுப்பதற்கு தங்கக் கரண்டியை பயன்படுத்துவது. மர கரண்டியைதான் பயன்படுத்துவோம்” என்று அந்தப் பெண் சொன்னாராம்.

தற்கு பதில் தந்த சாக்ரடீஸ் ”உலகத்தில் எந்த ஒன்று பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே சிறந்த அழகு..!” என்று அந்தப் பெண்ணின் வினாவிற்கு விளக்கம் தந்தாராம். என்ன நண்பர்களே..! இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய சிறந்தத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment