ஆர்.ஐ.எம். நிறுவனமே பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்கின்றது
ஆர்.ஐ.எம் என்றறியப்பட்ட ‘ரிசேர்ச் இன் மோசன்’ (Research In Motion) நிறுவனம் கனடா நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மற்றும் கம்பி இல்லா சாதன தயாரிப்பு நிறுவனமாகும்.
பிளக்பெரி கையடக்கத் தொலைபேசிகள் அவற்றின் தொழிநுட்ப அம்சங்களுக்கு மட்டுமன்றி அவற்றின் பாதுகாப்பான தகவல் சேவைகளுக்கும் பிரபல்யம் பெற்றது
குறிப்பாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அதி வேகமாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றமுடியும்.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) பரிசீலிக்க முடியாது.
பிளக்பெரியின் விற்பனையானது அப்பிளின் ஐ போன் மற்றும் அண்ட்ரோய்ட் சாதனங்களின் வருகையால் பெரிதும் குறைந்துள்ளது.
புதுப்போட்டிகளுக்கு முகங்கொடுக்கமுடியாமல் பிளக்பெரி தற்போது திணறி வருகின்றது.
மேலும் பங்குச்சந்தையிலும் ஆர்.ஐ. எம் நிறுவனத்திற்கு வீழ்ச்சியே மிஞ்சியது.
பிளக்பெரி நிறுவனதின் தொடர்ச்சியான வீழ்ச்சியையடுத்து அந்நிறுவனத்தினை பிரபல நிறுவனங்கள் வாங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும் அந்நிறுவனம் அச் செய்தியினை வதந்தி எனக்கூறி மறுத்தது.
தற்போது ஆர்.ஐ.எம். நிறுவனம் பெரும் இக்கட்டான நிலையில் உள்ள போதிலும் அதன் இறுதி நம்பிக்கை ‘பிளக்பெரி 10 இயங்குதளத்தின் மீதாகும்.
பிளக்பெரி 10 இயங்குதளத்தில் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளை வெகுவிரைவில் அந்நிறுவனம் சந்தைப்படுத்தவுள்ளது.
பிளக்பெரி லண்டன், பிளக்பெரி மிலான் ஆகிய 2 மொடல்கள் சந்தைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பிளக்பெரி லண்டன் dual-core 1.5GHz CPU, 1GB of RAM, 16GB of onboard storage, and front and rear cameras ஆகிய தொழிநுட்ப வசதிகளைக் கொண்டிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தனது இறுதி அஸ்திரமான ‘பிளக்பெரி 10′ இயங்குதளத்தின் மீதான வரவேற்பைப் பொறுத்தே ஆர்.ஐ.எம் தனது அடுத்தக்கட்ட முடிவுகளை மேற்கொள்ளுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment