தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு)



உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஸ்மார்ட் போனை உருவாக்கி பிரிட்டிஷ் பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட கெய்ரோன் ஸ்காட் வுட்ஹவுஸ் என்ற மாணவர் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.


இக்கண்டுபிடிப்பினைக் குறித்து மாணவர் கருத்து தெரிவிக்கையில், சிறுவயதில் இருந்தே தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில் கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன்.
அந்த வகையில் உருவானது தான் இந்த ஸ்மார்ட்போன். மற்ற கைபேசிகளைப் போலவே, இதிலும் கமெரா உட்பட பல்வேறு வசதிகள் உள்ளது. ஆட்ஜிரோ என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே சாதாரணமாக புகைப்படம் எடுக்கும் போது, ஏற்படும் குறைபாடுகள் இதில் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூங்கில் மற்ற பொருட்களை ஒப்பிடும்போது வலிமையானதும் மற்றும் உறுதியானதும் ஆகும். இந்த மூங்கிலில் ஸ்மார்ட்போன் செய்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் தற்போது தான் உருவாக்கியுள்ள மூங்கில் ஸ்மார்ட்போன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் இந்த மூங்கில் ஸ்மார்ட்போனை வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஸ்மார்ட்போனை இந்தாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டுவர அம்மாணவர் திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment