விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகளானது இன்னும் 3 வருடங்களில் அப்பிளின் ஐ போனை முந்துமெனவும், அதிகம் விற்பனையாகும்
கையடக்கத்தொலைபேசிகளின் வரிசையில் இரண்டாவது இடத்தினைப் பெறுமெனவும் ‘ஐ சப்ளை’ என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
இவ்வரிசையில் அண்ட்ரோய்ட் முதல் இடத்தினைப் பெறுமெனவும் ஐ சப்ளை தெரிவிக்கின்றது.
விண்டோஸின் இவ்வளர்ச்சிக்கு நொக்கியாவே பிரதான பங்குவகிக்குமெனவும் அந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இம் மாதம் நடைபெற்ற பாவனையாளர் இலத்திரனியல் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நொக்கியா லுமியா 900 கையடக்கத்தொலைபேசியானது பலரினது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.
விண்டோஸ் மூலம் இயங்கும் இக்கையடக்கத்தொலைபேசியானது நொக்கியா, மைக்ரோசொப்ட் கூட்டணியில் வெளியாகிய 3 ஆவது கையடக்கத் தொலைபேசியாகும்.
இதற்கு முன்னர் வெளியாகிய நொக்கியா லுமியா 800, 710 ஆகிய கையடக்கத்தொலைபேசிகள் பெரிதாக பாவனையாளர்களைக் கவரவில்லை.
ஆனாலும் லுமியா 900 இன் அறிமுகமானது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இம்மாதிரியானது பாவனையாளர்களின் நொக்கியாவுக்கு மட்டுமன்றி விண்டோஸிற்கு பெரிய திருப்பு முனையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகளின் உலகளாவிய சந்தைப்பங்கு வெறும் 2 % ஆகும்.
எனினும் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டளவில் இது 16.7 ஆக உயரும் என ஐ சப்ளை எதிர்வு கூறியுள்ளது.
மேற்காட்டப்பட்டுள்ளவாறு அண்ட்ரோய்ட் 2015 ஆம் ஆண்டளவில் 58.1% சந்தைப்பங்கைப் பெறுமெனவும் அப்பிளின் ஐ ஓஎஸ் அதாவது ஐ போன்கள் 16.6 % பங்கை மட்டுமே பெற்று 3 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடையுமெனவும் ஐ சப்ளை தெரிவிக்கின்றது.
நொக்கியா தனது அமெரிக்கச் சந்தையின் மீது அதிக அக்கறைகொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு அமெரிக்காவில் நொக்கியா வெற்றியடைந்தால் அதனால் இழந்த சந்தையினை இலகுவாக மீளப்பெற முடிவதுடன் விண்டோஸும் இலகுவாக சந்தையில் தனது ஆதிக்கத்தினை அதிகரிக்கமுடியுமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments:
Post a Comment