வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு இந்த பதிப்பு பயன்படும்
என்று நம்புகிறேன்
(Adolf Hitler, ஜனவரி 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்[2] சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார். குழந்தையாக இட்லர் அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860-1907), தந்தை அலாய்ஸ் இட்லர்-க்கும் (1837-1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா இட்லர் மட்டும்தான். [தொகு] தந்தையின் துன்புறுத்தல் இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார். அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார்.
பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது. கல்வி தொடக்கத்தில் இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார்.
இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவ்வியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஓருவரையொருவர் சந்தித்ததேயில்லை. ஒவியராதல் இட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஒவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார்.
அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டார். அடால்ப் இட்லர் பெயர்க்காரணம் அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். இட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.
வறுமையில் வாழ்தல் இட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தார். இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வருமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழக்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.
இட்லரின் யூத எதிர்ப்பு வியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (Anti-Semite) இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான அகஸ்ட் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதான யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன. புராட்டஸ்தாந்து சமய ஈடுபாடு இட்லர் யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார்.
போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று இட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார். ஆரியக் கோட்பாடு ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Race) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூததலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது.
இராணுவத்தில் பணிபுரிதல் இட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்த்து இன்னுமொரு காரணமும் இருந்த்து. ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார். முதல் உலகப்போரில் இட்லர் பவேரியன் இராணுவப்பிரிவில் இட்லர் இட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். பல் ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுர்யம்படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரித்தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது. குழந்தைகளின் கொடூரக்கொலை தாக்குதல் 1914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார்.
இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார். தற்காலிகமாக பார்வையிழத்தல் 15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதனம் செய்துகொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயேயிருந்த்து என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. (பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.
வெர்செயில் ஒப்பந்தத்தின் விளைவு இட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. படைக்குறைப்பு ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (John Keegan) மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது. வெர்செய்ல் ஒப்பந்தம் ஜெர்மனி நாட்டின் பாதுகாப்புக்கு அனுமதித்த படைக்கலன்கள்: காலாட்படை -1,00,000 கப்பலகள் -6 மட்டுமே நீர்முழுகி கப்பல் -அனுமதியில்லை ஆயுதம் தாங்கி -வாகானான்கள் அனுமதியில்லை நாசிசத்திற்கான காரணங்கள் இட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. இட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் இட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.
அரசியலில் நுழைவு இட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் இட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் இட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் இட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு இட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இட்லரின் பேச்சாற்றல் கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் இட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 இட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்.
அன்பு நண்பரே இந்த தளத்தில் உள்ள சில
ReplyDeleteபதிப்புகள் என்னுடையது என்பதை தெரிவித்து கொள்கிறேன்
Easy யாக copy paste பண்ணிவிட்டிர்கள்..
தவறை உணராத வை அது தவறாக தெரியாது ..
புரிந்து கொள்ளுங்கள் ..
பிழை இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்