அனைத்து
அன்பு உள்ளங்களுக்கு இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள்
அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன். இன்று என்னதான் அவசர உலகத்தில் நமது இயல்பான வாழ்க்கை
முறைகளை சிலர் மறந்தும் பலர் தொலைத்தும் பயணித்தாலும் இன்னும் ஒரு சில
விசயங்கள் நாம் சுவாசிக்கும் காற்றைப்போல் எப்பொழுதும் மாற்றங்கள் எதுவும்
இன்றி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் முதன்மையில் இருப்பது இசை.
இசைக்கு வசமாகாத எந்த இதயமும் இந்த உலகத்தில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு
காலத்தில் இசையில் இந்த பூமியே அசைந்தாடும் என்று குறுப்பிட்டு
இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாது ஒரு குறிப்பிட்ட ராகத்தை வாசித்தால்
மழையும் மண்ணில் வந்து தவழும் என்றும் பல குறிப்புகள் இருக்கின்றனன். இவை
உண்மையும் கூட. ஆனால் இன்று இசையால் பூமி அசைந்தாடுகிறதோ இல்லையோ பூமியில்
வசிக்கும் நாம் அசைந்தாடுவது மட்டும் திண்ணம். சரி இன்றைய தகவலுக்கும் இந்த
இசைக்கும் என்ன காரணம் என்று பலருக்கு பல கேள்விகள் தோன்றலாம் சொல்கிறேன்.
இன்று
இந்த உலகத்தில் எங்கு திரும்பினாலும் ஏதேனும் ஒரு இசை நமது செவிகளை
வருடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த அளவிற்கு இசையால் இந்த மொத்த உலகமும்
மயங்கிக் கிடப்பது உண்மைதான். இந்த இசையிலும் பல வகைகள் இருக்கின்றன. ஒரு
காலத்தில் விரல்கள் மட்டுமே தீண்டி உயிர் பெற்ற இசைகள். இன்று கால்களும்
தீண்டி இறந்துகொண்டிருக்கிறது. சிலர் இசைக் கருவிகளை வாசிக்கத் தொடங்கினால்
நாம் மெய் மறந்தும் அங்கே உறங்கிபோகும் அளவிற்கு மிகவும் இனிமையாக
இருக்கும். இன்னும் சில பேர் இசையை உருவாக்குகிறேன் என்ற பெயரில்
அதுதாங்க...... அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா.....!!!????
என்பது போல அந்த இசையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரன் எல்லோரும்
குடும்பத்துடன் சாமியாராபோகிற அளவிற்கு இசையைக் கொலைவெறியுடன்
வாசிப்பவர்களும் உண்டு.
சரி இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று நாம் தகவலுக்கு வருவோம். சில நாட்களுக்கு முன்பு இத்தாலி நாட்டில் இசையில் செய்த ஆய்வுகளில் இசை மனிதனில் ஏற்படும் நாற்பதுக்கும் அதிகமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்று அதன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலும் மிகவும் உயிரை குடிக்கும் நோய்களில் ஒன்றான மாரடைப்பு முதன்மையான இடம் வகிக்கிறதாம். இந்தக் குழுக்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செய்த இந்த ஆய்வுக்கு ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள 24 பேர்களை தேர்வு செய்தனர். இவர்களில் ஒரு பிரிவினருக்கு ஹெட் போன் மூலம் மெல்லிசையை தினமும் குறிப்பிட்ட நேரம் கேட்கச்செய்தனர். மற்றொரு பிரிவினரை அதிரடியான பாப் இசையை கேட்க வைத்தனர். அப்போது இரு தரப்பினரின் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு மருத்துவ அளவீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் அதிரடியான இசையை கேட்டவர்களுக்கு தோலின் அடியில் உள்ள ரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டது. இருதய துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் உயர்ந்தது. மூச்சு விடுவது ஒழுங்கற்ற நிலையில் காணப்பட்டது.
அதே
நேரத்தில் மெல்லிசையை மிதமான சத்தத்தில் கேட்டவர்களுக்கு இருதய துடிப்பு
சீராக இருந்தது. அவர்களது ரத்தக்குழாய்கள் விரிவடைந்த நிலையில் ரத்த
ஓட்டம், ரத்த அழுத்தம் சீராக காணப்பட்டது.
இதே போன்ற ஆய்வு சாதாரண நோயாளிகளிடமும் நடத்தப்பட்டது. அதில் அதிரடியான இசையைக் கேட்டவர்களுக்கு நோயின் அறிகுறிகள் அதிகரித்துக் காணப்பட்டது. மிகவும் மென்மையான இசையை கேட்டவர்களுக்கு ரத்த ஓட்டத்தின் அளவு மிகவும் தெளிவான ஒழுங்கு முறையில் நடைபெறுவதையும் அவர்களின் ஞாபக சக்தி சற்று அதிகரித்து இருப்பதையும் இந்த ஆய்வில் உறுதி செய்து இருக்கிறார்கள். இறுதியாக அந்த குழுக்கள் அளித்த அறிக்கையில் உலகத்தில் அதிக சத்தத்துடன் இசையை கேட்பவர்களைவிட மிகவும் மெல்லிசையை கேட்பவர்களுக்குத்தான் அதிக புத்துணர்வுகள் ஏற்படுவதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
இதில் அதிரடியான இசையைக் கேட்பவர்கள் மென்மையான இசையை கேட்பவர்களின் வாழ் நாட்களின் எண்ணிக்கையில் வருடத்திற்கும் அதிகமான நாட்களில் பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இனி வரும் நாட்களில் அதிக சத்தத்துடன் கூடிய அதிரடியான இசைகளை குறைவான சத்தத்தில் வைத்து ரசித்துக் கேளுங்கள். இதைவிட மிகவும் மெல்லிய இசையை அதிகமாக கேட்க முயற்சியுங்கள். இந்த இசையில் ஆய்வில் மற்றொரு தகவல் என்னவென்றால் சாதரணமாக நாம் ஒரு விஷத்தை மனதில் நிறுத்திக்கொள்ள எடுத்துகொள்ளும் நேரத்தைவிட இசையுடன் அந்த தகவலை மனதில் நிறுத்திக்கொள்ள எடுத்துகொள்ளும் நேரம் என்பது சதவீதம் குறைவு என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது ஆகவே இயன்றவரை தங்களின் குழந்தைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இசையுடன் கூடியக் கல்விகளை அறிமுகம் செய்து அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்யுங்கள்.
என்ன
நண்பர்களே..! இன்றைய இசைப் பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும்
பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு அறியத் தகவலுடன் உங்களை
சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு
செல்லுங்கள்.