தினம் ஒரு திருக்குறள்

Tuesday, February 28, 2012

இசையால் நோய் தீரும் அதிசயம்

னைத்து அன்பு உள்ளங்களுக்கு இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று என்னதான் அவசர உலகத்தில் நமது இயல்பான வாழ்க்கை முறைகளை சிலர் மறந்தும் பலர் தொலைத்தும் பயணித்தாலும் இன்னும் ஒரு சில விசயங்கள் நாம் சுவாசிக்கும் காற்றைப்போல் எப்பொழுதும் மாற்றங்கள் எதுவும் இன்றி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் முதன்மையில் இருப்பது இசை. இசைக்கு வசமாகாத எந்த இதயமும் இந்த உலகத்தில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு காலத்தில் இசையில் இந்த பூமியே அசைந்தாடும் என்று குறுப்பிட்டு இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாது ஒரு குறிப்பிட்ட ராகத்தை வாசித்தால் மழையும் மண்ணில் வந்து தவழும் என்றும் பல குறிப்புகள் இருக்கின்றனன். இவை உண்மையும் கூட. ஆனால் இன்று இசையால் பூமி அசைந்தாடுகிறதோ இல்லையோ பூமியில் வசிக்கும் நாம் அசைந்தாடுவது மட்டும் திண்ணம். சரி இன்றைய தகவலுக்கும் இந்த இசைக்கும் என்ன காரணம் என்று பலருக்கு பல கேள்விகள் தோன்றலாம் சொல்கிறேன்.
ன்று இந்த உலகத்தில் எங்கு திரும்பினாலும் ஏதேனும் ஒரு இசை நமது செவிகளை வருடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த அளவிற்கு இசையால் இந்த மொத்த உலகமும் மயங்கிக் கிடப்பது உண்மைதான். இந்த இசையிலும் பல வகைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் விரல்கள் மட்டுமே தீண்டி உயிர் பெற்ற இசைகள். இன்று கால்களும் தீண்டி இறந்துகொண்டிருக்கிறது. சிலர் இசைக் கருவிகளை வாசிக்கத் தொடங்கினால் நாம் மெய் மறந்தும் அங்கே உறங்கிபோகும் அளவிற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இன்னும் சில பேர் இசையை உருவாக்குகிறேன் என்ற பெயரில் அதுதாங்க...... அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா.....!!!???? என்பது போல அந்த இசையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரன் எல்லோரும் குடும்பத்துடன் சாமியாராபோகிற அளவிற்கு இசையைக் கொலைவெறியுடன் வாசிப்பவர்களும் உண்டு.

ரி இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று நாம் தகவலுக்கு வருவோம். சில நாட்களுக்கு முன்பு இத்தாலி நாட்டில் இசையில் செய்த ஆய்வுகளில் இசை மனிதனில் ஏற்படும் நாற்பதுக்கும் அதிகமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்று அதன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலும் மிகவும் உயிரை குடிக்கும் நோய்களில் ஒன்றான மாரடைப்பு முதன்மையான இடம் வகிக்கிறதாம். இந்தக் குழுக்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செய்த இந்த ஆய்வுக்கு ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள 24 பேர்களை தேர்வு செய்தனர். இவர்களில் ஒரு பிரிவினருக்கு ஹெட் போன் மூலம் மெல்லிசையை தினமும் குறிப்பிட்ட நேரம் கேட்கச்செய்தனர். மற்றொரு பிரிவினரை அதிரடியான பாப் இசையை கேட்க வைத்தனர். அப்போது இரு தரப்பினரின் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு மருத்துவ அளவீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

தில் அதிரடியான இசையை கேட்டவர்களுக்கு தோலின் அடியில் உள்ள ரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டது. இருதய துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் உயர்ந்தது. மூச்சு விடுவது ஒழுங்கற்ற நிலையில் காணப்பட்டது.
அதே நேரத்தில் மெல்லிசையை மிதமான சத்தத்தில் கேட்டவர்களுக்கு இருதய துடிப்பு சீராக இருந்தது. அவர்களது ரத்தக்குழாய்கள் விரிவடைந்த நிலையில் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சீராக காணப்பட்டது.

தே போன்ற ஆய்வு சாதாரண நோயாளிகளிடமும் நடத்தப்பட்டது. அதில் அதிரடியான இசையைக் கேட்டவர்களுக்கு நோயின் அறிகுறிகள் அதிகரித்துக் காணப்பட்டது. மிகவும் மென்மையான இசையை கேட்டவர்களுக்கு ரத்த ஓட்டத்தின் அளவு மிகவும் தெளிவான ஒழுங்கு முறையில் நடைபெறுவதையும் அவர்களின் ஞாபக சக்தி சற்று அதிகரித்து இருப்பதையும் இந்த ஆய்வில் உறுதி செய்து இருக்கிறார்கள். இறுதியாக அந்த குழுக்கள் அளித்த அறிக்கையில் உலகத்தில் அதிக சத்தத்துடன் இசையை கேட்பவர்களைவிட மிகவும் மெல்லிசையை கேட்பவர்களுக்குத்தான் அதிக புத்துணர்வுகள் ஏற்படுவதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

தில் அதிரடியான இசையைக் கேட்பவர்கள் மென்மையான இசையை கேட்பவர்களின் வாழ் நாட்களின் எண்ணிக்கையில் வருடத்திற்கும் அதிகமான நாட்களில் பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இனி வரும் நாட்களில் அதிக சத்தத்துடன் கூடிய அதிரடியான இசைகளை குறைவான சத்தத்தில் வைத்து ரசித்துக் கேளுங்கள். இதைவிட மிகவும் மெல்லிய இசையை அதிகமாக கேட்க முயற்சியுங்கள். இந்த இசையில் ஆய்வில் மற்றொரு தகவல் என்னவென்றால் சாதரணமாக நாம் ஒரு விஷத்தை மனதில் நிறுத்திக்கொள்ள எடுத்துகொள்ளும் நேரத்தைவிட இசையுடன் அந்த தகவலை மனதில் நிறுத்திக்கொள்ள எடுத்துகொள்ளும் நேரம் என்பது சதவீதம் குறைவு என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது ஆகவே இயன்றவரை தங்களின் குழந்தைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இசையுடன் கூடியக் கல்விகளை அறிமுகம் செய்து அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்யுங்கள்.

ன்ன நண்பர்களே..! இன்றைய இசைப் பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு அறியத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன் !?



னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த அரிய குட்டித் தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் மணிக்கணக்கில் வாசிக்கும் அல்லது கேட்கும் தகவல்களை விட  ஓரிரு வரிகளிலோ அல்லது ஒரு சில நிமிடங்களிலோ, எங்கேனும் யதார்த்தமாக வாசிக்கவோ அல்லது கேட்கவோ நேரிடும் குட்டித் தகவல்கள் மிகவும் ரசிக்கும் வகையிலும், வியப்பூட்டும் வகையிலும் அமைவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதுபோலத்தான் இன்றையத் தகவலும் உங்களை ரசிக்க வைக்கும் என்பது திண்ணம்.
ந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால்  பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள்  கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில்  பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை  மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இப்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கான காரணத்தை  இந்தத் தகவலின் வாயிலாக அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி .


அறிவுக்கு விருந்து !!!


 அனைவருக்கும் வணக்கம் ` இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .
 ல்' என்ற ஒரு வகை மீன்கள் தொடர்ந்து பயணம் செய்து உலகத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சென்றுவிடுமாம் .அதுமட்டும் இல்லை உலகத்தில் உள்ள உயிரினங்களில் உடலில் இருந்து அதிகமான மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே உயிரினம் இந்த ஈல்' வகை மீன்கள்தானாம் . இந்த மீன்களின் உடலில் இருந்து ஒரு வினாடிக்கு 400-முதல் 650 வோல்ட்டு மின்சக்தி வெளிப்படுகிறதாம் .இந்த வகை மீன்கள் அதிகமாக பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப்படுகிறதாம் . இதன் அருகில் இருக்கு ஒரு மனிதனைக்கூட இதன் சக்தியால் 5 நிமிடங்களில் கொன்றுவிடும் சக்தி இந்த வகை மீன்களில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

னிதர்களாகிய நாம் 60 வயதை கடக்கும் பொழுது நமது ருசி அறியும் நாக்கின் சுவை மொட்டுகளின் 40பகுதி அழிந்து போய்விடுமாம் .

மது உடம்பில் உள்ள நரம்புகளை ஒத்து மொத்தமாக ஒரே நீளத்தில் நீட்டினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தேனீக்கலின் தோன்றிவிட்டனவாம் .

றிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள் வாத்துக்கள் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களே. வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடுமாம்.

Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

னிதர்களில் நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே .

 லகத்தில் உள்ள விலங்கினகளில் இந்த Cat fish வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27, 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் .

உலகத்தில் தோன்றிய முதல் வலைத்தளம் Blog > மின் அஞ்சல்கள் email > முதல் தேடுபொறி search engine


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று உலகத்தில் காற்றின் வேகத்தை விட கணினியின் வேகம் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது. கணினி என்றதும் இணையம்தான் அதில் தலைப்பு செய்தி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் பரவிக்கிடக்கிறது இந்த இணைய வளர்ச்சி.

ஒரு காலத்தில் ஆடை இல்லாமல் வெட்கம் அறியாமல் சண்டை இல்லாமல் பொறாமை இல்லாமல் கண்ணில் பட்டதை ரசித்து கைகளில் கிடைத்ததை உண்டு தினம் தினம் தனது வாழ்வை ஒரு விலங்கைப் போல கடந்தவன் செய்த புதுமைதான் இந்த கணிணிமயமான இன்றைய உலகமா !? என்று எண்ணிக்கொள்வதற்கு வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.

த்தனை எத்தனை வளர்ச்சிகள் !? தரையில் நடந்தவன் நிலவில் மிதக்கிறான். ஒற்றைக் கணினி கொண்டு இந்த உலகை ரசிக்கிறான். அந்த அளவிற்கு இந்த இன்டர்நெட் என்று சொல்லப்படும் இந்த வார்த்தைக்குள் இத்தனை சக்தியா !? சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பிரமிப்புடன் இந்த இணையம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில தகவல்களை நாம் அறிந்துகொள்ளலாம்.

ணையத்தில் இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் அஞ்சல்கள் (email) பற்றி பலருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த மின் அஞ்சலை முதன் முதலில் உருவாக்கி அனுப்பிய முதல் மனிதர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..!? 

ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.

மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே என்றால் பார்த்துகொள்ளுங்கள்.


 

இன்று தேடுபொறி (search engine) என்றாலே உடனே அனைவரின் எண்ணங்களிலும் பதிலாய் வருவது கூகுள்தான் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது இதன் புகழ். ஆனால் நம்மில் எத்ததனை பேருக்கு உலகத்தில் முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறி (search engine) பற்றித் தெரியும் !?

ஏப்ரல் 20, 1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.com  தான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும் (search engine). யாஹீவும் (Yahoo), கூகுளும் (Google) இதற்கு பின்னால் வந்தவையே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ன்னதான் இணையத்தை பற்றி தகவல்கள் சொன்னாலும் இந்த தகவல் போன்று நமது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த நமக்கு ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த வலைத் தளம். இன்று வலைத்தளம் பயன்படுத்தி தங்களின் எண்ணங்களை பகிர்ந்து வரும் நட்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது என்பது யாரும் மறுக்க இயலாத திண்ணம்.

ரி இந்த வலைத் தளம் எப்பொழுது முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தளத்தின் பெயர் என்ன என்று ப்ளாக் எழுதும் எத்தனை நண்பர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.


ஸ்டின் ஹால் (Justin Hall)  தான் இணையத்தின் முதல் வலைப் பதிவாளராக அறியப்படுகிறார். ஜனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/  தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.

ன்ன நண்பர்களே இணையம் பற்றிய சில சுவாரசியமானத் தகவல்களை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் பல புதியத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம் ( Largest university in the world )



னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். கடந்து ஒரு வாரமாக தேர்தல் முடிவுகள், புதிய முதல்வர், புதிய அமைச்சர் என பல எதிர்பார்ப்புகளுடன் கழிந்து போனது. சரி இனி நாம் விசயத்திற்கு வருவோம். பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?

ம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலே உடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன் இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..! உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's Largest University Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
து மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக் கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26 கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!!

லகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்கு மெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக் கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!

கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

துமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம், நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம், உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.

த்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள். என்ன நண்பர்களே..! இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

கல்வியின்றி காலம் வென்றவன் :தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)



னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் கொட்டிக் கிடக்குது குட்டித் தகவல்கள் என்றப் பகுதியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பொதுவாக நம்மில் பலருக்கு அதிகமாக கேட்பதை விட அதிகமாக பேசுவதுதான் பிடிக்கும். அதிலும் மணிக்கணக்கில் பேசினாலும் எந்த சுவராஸ்யங்களும் இல்லாமல் ஏதோ அனைவரும் வேண்டா வெறுப்பாக கேட்கும் அளவில் பேசிக்கொண்டே இருப்பவர்கள் சிலர் உண்டு. இதில் இன்னும் சிலர் முத்துக்கள் உதிர்த்தார்போல சில வார்த்தைகள்தான் பேசுவார்கள். ஆனால் அந்த சிலவார்த்தைகள் பலமணி நேரம் சிந்திக்கத் தூண்டும் வகையில் கருத்துக்கள் நிறைந்த பேச்சாக இருக்கும். ஒரு மிகப்பெரிய பூட்டை திறக்கப் பயன்படும் ஒரு சிறிய திறவுகோல் போன்ற சிறப்பு கொண்டவைதான் குட்டித் தகவல்கள் என்று கூட சொல்லலாம். காரணம் பக்கம் பக்கமாக தகவல்கள் சேகரித்து எழுதினாலும் இதுபோன்ற ஒருசில வரிகளில் வாசிக்க நேரும் குட்டித் தகவல்கள் பொதுவாக எல்லோருக்கும் ஒரு சுவராஸ்யம் நிறைந்த எதிர்பார்ப்புகளை வாசிப்பின் தொடக்கத்திலே ஏற்படுத்தி விடுகிறது என்று சொல்லலாம்.
ரி..! இனி நாம் தகவலுக்குள் செல்லலாம். கல்வி இன்றைய நிலையில் எல்லோரும் கல்வி கற்கிறார்களோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு பள்ளி தொடங்கிவிட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கல்வி ஒரு மிக சிறந்த வருமானம் ஈட்டும் தொழிலாக மாறிப்போனது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காலத்தில் இலவசமாக சில சலுகைகளைக் கொடுத்தாலாவது தங்களின் குழந்தைகளை கல்விக் கற்க அனுப்ப மாட்டார்களா என்று ஏங்கிய உயர்ந்த உள்ளங்கள் சுவாசித்த இதே தேசத்தில் இன்று பணம் இல்லாத ஏழைகள் படித்து என்ன கிழித்தார்கள் என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டார்கள் திறமை உள்ள மழலை செல்வங்கள் . இதிலும் இன்னும் சில யார் எது சொன்னாலும் நமக்கு என்ன என்று எந்தக் கவலைகளும் இன்றி காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு இப்படி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கல்வி என்பது உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது என்று சொல்லலாம் . ஆனால் இத்தனை அறிவியல் வளர்ச்சிகளை நாம் எட்டியும் இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு மாற்றத்தை  ஒரு தனி மனிதன் ஏற்படுத்தி சென்றார் என்றால் நம்புவீர்களா !??
ம் நண்பர்களே அவர்தான் இந்த உலகத்தின் மொத்த வளர்ச்சியையும் யாரும் வெல்ல இயலாத சாதனைகளின்  உச்சத்தில் இட்டு சென்ற தாமஸ் ஆல்வா எடிஸன்தான் அவர் .இப்படித்தான் ஒரு முறை எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்  ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம் .படிக்காத ஒரு மேதை.! பட்டங்கள் எதுவும் பெறாத நூறு பல்கலைக்கழகங்கள் ஒன்றாய் பிரசவித்த அதிசய மனிதன் என்று சொல்லலாம் .

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.” என்ற வார்த்தைகளை சாதனைகளின் பட்டியலில் படம் பிடித்துக் காட்டிய வினோத மனிதன் .

ம்.!! தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் பிறக்கும்பொழுதே தனது தலை பின்புறமாக சற்று நீட்டிய நிலையில் பிறந்தார். அவர் வளர்ந்தப் பிறகும் அதன் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் போனது. அவர் பள்ளிக்கு செல்லும் வயது வந்ததும் தாமஸ் ஆல்வா எடிசனை அவரது தாயார் பள்ளியில் சேர்த்தார். தான் பள்ளிக்கு சென்ற ஒரிரு நாட்களில் தாமஸ் தனது அன்னையிடம் நான் பள்ளிக்கு இனி செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தார். காரணம் கேட்ட அவர் தாய் பள்ளியில் எல்லோரும் என்னை ”கோண மண்டையா” ”கோண மண்டையா” என்று சொல்லி கேலி செய்வதாக கூறினார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி அவரது தாயார் மீண்டும் பள்ளிக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஒரு இரண்டு மாதங்கள் சரியாக பள்ளி சென்ற எடிசன் மீண்டும் ஒரு நாள் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார்.

மீண்டும் சமாதனப்படுத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்ட எடிசன் மீண்டும் ஒருமாதகாலம் மட்டுமே பள்ளிக்கு சரியாக சென்றிருப்பார். வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல மறுப்புத் தெரிவிக்கத் தொடங்கிய எடிசனின் செயல் கண்டு கோபம் கொண்ட அவரின் தாயார் உனக்கு ”கோண மண்டை” அதுதான் படிப்பும் ஏறவில்லை, சொல்வதையும் கேட்க மறுக்கிறாய் என்று அடிக்கத் தொடங்கினார். அன்றுடன் தனது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த அதே தாமஸ் ஆல்வா எடிசன்தான். பிற்காலத்தில் மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர்; அமெரிக்க அரசு அவருக்கு சுமார் 1097 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்கியிருந்தது உலகத்தில் அதிகக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதித்தவர்களின் பட்டியலில் இன்றும் முதல் இடத்தில் திகழ்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தில் இன்னும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் வியப்பானத் தகவல் என்னவென்றால்.எந்த ஒரு தனி மனிதனுக்காகவும் தங்களின் சட்டத்தை மாற்றிக் கொள்ளாத அமெரிக்க முதல் முறையாக ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார்.அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 மணிக்கு ‘வி Statue of Liberty கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் Traffic Signals விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் அனைத்துவைக்கப் பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த பின்பு அவரின் தலையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் மனிதர்களாகிய நமக்கு இருக்கும் அதே அளவுதான் மூளை இருக்கிறது. ஆனால் அவரின் பின்புறத் தலையின் நீந்தப் பகுதியில்தான் ஏதோ கண்டறிய இயலாத மிகப்பெரிய மர்மம் மறைந்திருப்பதாக அறிக்கை பிறப்பித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  .


ஒருவேளை நமக்குத் தெரிந்தே யாருக்கேனும் சராசரி மனிதனின் வளர்ச்சியில் இருந்து மாறுபட்ட நிலையில் உடல்களின் வளர்ச்சி இருந்தால் இவர்களும் நாளை வரலாறு பேசப்போகும் ஏதேனும் தனி சிறப்பு பெற்று இருப்பார்களோ என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றும் என்பது மட்டும் திண்ணம்.

ரி நண்பர்களே.! இந்த இன்று ஒரு தகவல் எந்த தொடரில் இன்று நாம் பார்த்த இந்தத் தகவலும் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.

அதிசய மின்விளக்கு


னைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஆனந்தமாக உலாவரும் இந்த உலகத்தின் உண்மையான நிறம் என்னவென்று தெரியுமா !? கருப்பு இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் மிகவும் அழகான நிறமும் கருப்புதான்.
சரி இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கருப்பு நிறத்திற்கு தினமும் வெள்ளையடித்து விடிய செய்கிறது கதிரவன் அதைதான் பகல் என்கிறோம். இந்த பகலிற்குள் தினமும் ஆயிரம் மாற்றங்கள் உள்ளிழுக்கும் சுவாசக் காற்றாய் விரும்பியும், விருப்பமின்றியும் தினமும் நம் ஒவ்வொருவராலும் சுவாசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இதே போன்றுதான் இரவும். இதுவரை நடந்த கருத்துக் கணிப்பின்படி உலகத்தில் அதிகமானவர்கள் விரும்புவது இரவு பொழுதுகளைத்தானாம். இந்த இரவுக்கும் மின்விளக்குகள் என்னும் ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்தவன்தான் இன்றைய அவசர உலகத்தில் சுவாசிப்பதைக்கூட தேவையற்ற வேலையென்று சொல்லும் நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.


ரி இரவுக்கு அழகு சேர்ப்பதே விளக்குகள்தான் இந்த விளக்குகள் பற்றி அதிகமாக மின் விளக்குகள் பற்றி நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆனால் உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் இதுவரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய மின் விளக்கைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. அதைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதன் நோக்கம்தான் இன்றைய இன்று ஒரு தகவல். சரி இனி நாம் தகவலுக்கு வருவோம். பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம் அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் . அந்த இரவு நேரங்களிலும் சில மணிநேரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா ?!!! சரி இப்படி ஒரு வியப்பான அந்த மின் விளக்கு எங்குதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள உங்கள் அனைவருக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ந்த பழமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம். இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்தான் இதை உருவாக்கி இருக்கிறார். இந்த விளக்கில் என்ன சிறப்பு என்றால் இந்த விளக்கை உருவாக்க இருபத்தி எட்டு மாதங்கள் (2.4 வருடங்கள்) ஆகியதாம். அது மட்டும் இல்லாது இந்த விளக்கைப் போன்று மற்றொரு விளக்கை எப்பொழுதும் யாரும் உருவாக்கவே இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம்.


துமட்டும் இல்லாது இதே போன்ற விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க இயலாது என்றும் அவரின் குறிப்பில் எழுதி இருந்தாராம். இதை ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இந்த விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையில் இப்பொழுதைய நிலையில் இந்த விளக்கை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று கூறி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த விளக்கில் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கும் என்று .

டோல்ப் சைலெட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மின் விளக்கு முதன் முதலில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஒன்றாம் ஆண்டு (1901) எரியத் தொடங்கி இன்றுடன் நுற்றிப் பத்து வருடங்களாகியும் (110) இன்னும் எந்தவித தடங்களும் இன்றி எரிந்துகொண்டே இருக்கிறதாம். இந்த அதிசயத்தை பார்க்கவரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

ன்ன நண்பர்களே இன்று ஒரு தகவலில் உலகத்தில் அணையா விளக்கைப் பற்றி அறிந்துகொண்டிருப்பீர்கள். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

அறிந்துகொள் அரியத் தகவல்கள் ஆயிரம் : உலகில் அழகு உள்ளத்தில் ( சாக்ரடீஸ் )



னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் புது வருடத்தின் முதல் வாரத்தில் இன்று ஒரு தகவல் பதிவின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் அனைவரும் பார்க்க இருப்பது அழகு பற்றிய ஒரு தகவல்தான்.
ரி உலகத்தில் என்னதான் ”அழகு” என்ற வார்த்தைக்கு ஆயிரம் விளக்கங்கள் தந்து தெளிவுபடுத்தி இருந்தாலும், இன்னும் நாம் புற அழகு ஒன்றே சிறந்த அழகாக எண்ணி அந்த நிரந்தரமற்ற அழகிற்கு மேலும் அழகு சேர்க்க பல ஆராய்சிகளும், ஆபரணங்களும் தினந்தினம் ஒரு புதுமையை நம்மில் புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. அழகு என்பதே ஆபத்தான ஒன்றுதான் என்ற போதும் அதை ரசிக்க மறுக்கும் இதயம் நம்மில் யாருக்கும் இல்லை என்றே சொல்லவேண்டும் . ”அழகு” என்ற வார்த்தையை நாம் அழகாக உச்சரிப்பதே ஒரு அழகுதான். சரி. இந்த அழகிற்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்னதான் தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எழலாம் இதோ சொல்கிறேன்.
 இப்படித்தான் ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஷிடம், ஒரு பெண் சென்று ”உலகத்தில் சிறந்த அழகென்பது எது?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் கொடுத்த தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் ”ஒரு பானை நிறைய சோறு இருக்கிறது. அதை எடுத்து உண்பதற்கு நமக்கு பயன்படுவது தங்கக் கரண்டியா !? இல்லை மர கரண்டியா !?” என்றுக் கேட்டாராம். அதற்கு அந்தப் பெண் ”அதெப்படி சோற்றை எடுப்பதற்கு தங்கக் கரண்டியை பயன்படுத்துவது. மர கரண்டியைதான் பயன்படுத்துவோம்” என்று அந்தப் பெண் சொன்னாராம்.

தற்கு பதில் தந்த சாக்ரடீஸ் ”உலகத்தில் எந்த ஒன்று பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே சிறந்த அழகு..!” என்று அந்தப் பெண்ணின் வினாவிற்கு விளக்கம் தந்தாராம். என்ன நண்பர்களே..! இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய சிறந்தத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..? குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா?

 தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்
மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். 

இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.




உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.

ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 

அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது

இந்த காரின் விலை Rs : 231471673.706 /-

இந்த காரின் விலை Rs : 231471673.706 /-


உலகத்தில் எத்தனையோ கார்களும்
கார் கம்பனியும் உள்ளது ..
பலருக்கு தெரிந்தவை
விலை உயர்ந்த கார் என்றால் பென்ஸ் என்பார்கள்
சிலர் ஆடி என்பார்கள் ..
ஆனால் உண்மையில் உலகில் விலை உயர்ந்த
கார் எது தெரியுமா !?
MAYBACH  EXELERO என்ற கார் தான்
இதன் விலை என்ன தெரியுமா !

ஆமாங்க 23 கோடியின் சில்லறைகள் ..
டாலர் மதிப்பில் $ 4706000

இந்த காரை பற்றி எனக்கு தெரிந்த சில குறிப்புகள்
price                                   4706000 $
top speed                            351 km/h, 218 mph
power & torque                  700 hp, 515 kW
                                             1022 Nm @ 2500 rpm
0-100 km/h, 0-62 mph       4.4 seconds

இந்த காரை பார்கறதே பெரிய விஷயம் ..
இந்த காரின் புகை படம் கிழே உள்ளது
எனக்கு தெரிந்த குறிப்பை சொன்னேன் தவறு
இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் ..







இந்த மொட்டை மாமா தான்
இந்த காருக்கு சொந்த காரர் என்று நினைக்கிறன்
  Bryan Williams Birdman

FACEBOOK உருவான கதை


அன்பு நண்பர்களே
இவை என் பதிப்பு இல்லையென்றாலும்
உங்களுக்கு உதவும் என்பதே  என் மகிழ்ச்சி ..
கிழே இருப்பவர் FACEBOOK OWNER  - facebook owner mark zuckerberg




ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு.
அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

2005

காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!

மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?’

ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
எனக்கு இன்று மனசு சரியில்லை’ என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்… குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்தி வந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.
மனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் ‘சமூக மூலதனம்’ எனச் சொல்லப்படுகிற சமூக
உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு என் றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம். கூட்டுச் செயல்பாட்டி லிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.

ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.
இந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமள வில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும். தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம். இதை உணர்ந் திருப்பதால்தானோ என்னவோ… இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே சிங்கபூர்க்கு அடுத்து ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய ‘ப்ரைவஸி’ பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. ‘அதனால் ஆபத்து… இதனால் தொந்தரவு!’ என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலி